அத்தியாயம் சமர்ப்பிப்பு நடைமுறை
பெருந்தன்மை பன்முகத் தமிழாய்வுத் தொகுப்பு
மறுப்புரை:
பின்வரும் கொள்கைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
வெளி மூலங்களிலிருந்து உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதி:
பிற மூலங்களிலிருந்து படங்கள், அட்டவணைகள் அல்லது மேற்கோள்களைப் பயன்படுத்த தேவையான அனுமதிகளைப் பெறுவது ஆசிரியரின் பொறுப்பாகும்.
அத்தியாயத்தை தயாரித்தல் (சமர்ப்பிப்பதற்கு முன்)
- பெருந்தன்மை தொகுப்பின் சமர்ப்பிப்பு வழிமுறைகள் மற்றும் வெளியீட்டு நெறிமுறைகளை கவனமாகப் படித்து புரிந்துகொள்ளவும்.
- உங்கள் அத்தியாயம் முற்றிலும் சொந்தப் படைப்பு என்பதையும், வேறெங்கும் வெளியிடப்படவில்லை என்பதையும் உறுதி செய்யவும்.
- ஆராய்ச்சி மாணவர் என்றால், தங்கள் மேற்பார்வையாளரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
- அத்தியாயத்தின் முதல் பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் சேர்கவும் - முழுப் பெயர், நிறுவனம், பதவி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல், ORCID iD. இறுதியாக, அத்தியாயத்தை Plagiarism மற்றும் இலக்கணப் பிழைகள் இல்லாதவாறு சரிபார்க்கவும்
- முழுமையான அத்தியாயத்தையும், அத்தியாயச் சுருக்கத்தையும் (Abstract 200-250 words) முதன்மை ஆசிரியர் [alagar@perunthanmai.co.in] அல்லது இணையாசிரியர் [sivakumar@perunthanmai.co.in] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
- அத்தியாயக் கோப்பை MS Word ஆவணமாக இணைக்கவும். Tamil - Unicode, English - Times New Roman 12pt.
- மின்னஞ்சலில், அத்தியாயத்தின் தலைப்பு மற்றும் சுருக்கமான பொருளடக்கத்தை குறிப்பிடவும்.
அத்தியாயங்களைச் சமர்பிக்கும்போது, ஆசிரியர்கள் தங்களுடைய ORCID iD-ஐ வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது கட்டாயமில்லை, ஆனால் பரிந்துரைக்கப்படுகிறது. ORCID iD உங்கள் பணியைத் துல்லியமாக அடையாளம் காணவும், உங்களுக்குரிய முழுமையான அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவுகிறது. ORCID iD இல்லையெனில் பதிவு செய்ய எங்கள் குழு உதவும்.
சமர்பித்த பின்னர்
- தொகுப்பு ஆசிரியர் குழுவிடமிருந்து ஏற்புக் கடிதம் (Acceptance Letter) வரும் வரை காத்திருக்கவும்.ம
- திப்பீட்டாளர்களின் கேள்விகள் அல்லது திருத்தப் பரிந்துரைகள் வந்தால், அவற்றிற்கு 15 நாட்களுக்குள் பதிலளித்து திருத்தங்களைச் செய்யவும்.
- அத்தியாயம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பதிப்புரிமை அறிவிப்புப் படிவத்தில் (Copyright Declaration Form) கையொப்பமிட்டு அனுப்பவும்.வெற்றிகரமான சமர்பிப்பிற்கு வாழ்த்துக்கள்!
குறிப்பு: எங்கள் மின்னஞ்சல் உங்களுக்குக் கிடைக்கவில்லையெனில், உங்கள் Spam கோப்புறையில் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளவும்.
Chapter Submission Procedure
Perunthanmai Multidisciplinary Tamil Studies Series
Disclaimer: The following policies are subject to change.
Permission to Use Material from Elsewhere:
Authors are responsible for obtaining necessary permissions to use material such as images, tables, or long quotations from other sources.
Preparing the Chapter (Pre-Submission)
- Read and understand the Perunthanmai Series Submission Guidelines and Publication Ethics.
- Ensure your chapter is original work and has not been published elsewhere.
- If you are a research scholar, obtain approval from your supervisor.
- Include all author details on the first page: Full Name, Affiliation, Designation, Address, Mobile Number, Email, ORCID iD.
- Finally, check the chapter for plagiarism and grammar errors.
- Email the complete chapter and chapter abstract (200-250 words) to the Editor-in-Chief [alagar@perunthanmai.co.in] or Associate Editor [sivakumar@perunthanmai.co.in].
- Attach the chapter file in MS Word format. Tamil - Unicode, English - Times New Roman 12pt.
- In the email, mention the chapter title and a brief summary.
Authors are encouraged, though not required, to provide their ORCID iD during submission. An ORCID iD helps accurately identify your work and ensures you receive proper credit. If you do not have an ORCID iD, we recommend registering one. Our team is happy to assist you with registration.
After Submission
- Wait for the Acceptance Letter from the Volume Editorial Team.
- Respond to reviewer queries or revision requests within 15 days.
- Once the chapter is accepted, sign and return the Copyright Declaration Form.
Note: If you do not receive our email, please check your spam folder.