Ads block

Banner 728x90px

Associate Editor Message - Tamil


 



அன்பார்ந்த ஆய்வாளர் பெருமக்களே, கல்வியியல் சமூக நண்பர்களே, வணக்கம்.தமிழாய்வுக் களத்தைப் பல்துறைப் பார்வையுடன் விரிவாக்கும் ஒரு தொடர்ச்சியான, தீவிரமான முயற்சியாக "பெருந்தன்மை தமிழாய்வு பல்துறை ஆய்விதழ்" இன்று தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நோக்கத்திற்கு ஏற்ப உயர்தர ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் முழு கவனத்துடன் செயல்படும் இந்த இதழின் குழுவில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக முனைவர் பேராசிரியர் க. அழகர் அவர்களுடன் இணைந்து, பெருந்தன்மை தமிழாய்வு மன்றம் என்ற பெயரில் பல்வேறு கல்வியியல் கருத்தரங்குகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்திருக்கிறோம். இப்போது தலைமை ஆசிரியரின் தலைமையிலும், அனுபவம் மிக்க ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலிலும், இந்த இதழ் கடுமையான சக மதிப்பாய்வு (peer-review) செயல்முறையைப் பின்பற்றி, கல்வித்துறையின் நேர்மையையும் தரத்தையும் உறுதியாகக் காப்பாற்றும் என்பதை மனமார உறுதியளிக்கிறேன்.

ஒவ்வொரு சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரையும் நியாயமான, ஆழமான, பக்கபலமான மதிப்பீட்டைப் பெற வேண்டும் என்பதில் எங்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. புதிதாக ஆய்வு தொடங்கும் இளம் ஆய்வாளர்கள் முதல் நீண்டகால அனுபவம் பெற்ற அறிஞர்கள் வரை — தமிழையும் தமிழ்ச் சமூகத்தையும் பல்வேறு கோணங்களில் ஆராயும் அனைவருக்கும் இந்த இதழ் சமத்துவமான, மரியாதைக்குரிய, திறந்த மேடையாக அமையும்.

பண்டைய தமிழ் அறிவு மரபையும் சமகாலப் பல்துறை ஆய்வு முறைகளையும் இணைக்கும் இந்த முயற்சியில் உங்கள் மதிப்புமிக்க ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். ஆய்வுக் கட்டுரை தயாரிப்பு முதல் வெளியீடு வரை அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குவது எங்கள் கடமையாகும். இந்த கல்வியியல் பயணத்தில் நீங்கள் எங்களுடன் இணைவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். உங்கள் ஒத்துழைப்பிறக்கும், மதிப்புமிக்க பங்களிப்பிறக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

நன்றி.

 

இணை ஆசிரியர்

ஆய்வியல் நிறைஞர்.ப.சிவகுமார்

பெருந்தன்மை தமிழாய்வு பல்துறை ஆய்விதழ்.

மார்ச் 2026.