கட்டுரை அமைப்பு:
- தலைப்புப் பக்கம்: கட்டுரையின் தலைப்பு, ஆசிரியர்(கள்) பெயர், சேர்ப்பு/பணியிட விவரங்கள் மற்றும் தொடர்புத் தகவல்களைச் சேர்க்கவும்.
- சுருக்கம்: ஆய்வின் நோக்கம், முறைகள், முக்கிய முடிவுகள் ஆகியவற்றைக் கொண்ட சுருக்கமான பொழிப்பு (250-300 சொற்கள்).
- சொற்குறிப்புகள்: 5-6 பொருத்தமான சொற்குறிப்புகள்.
- பொருளடக்கம்: ஆய்வின் பின்னணி, முக்கியத்துவம் மற்றும் நோக்கங்களைத் தெளிவுபடுத்துக.
- உள்ளடக்கம்: ஆய்வு முறை, முடிவுகள் மற்றும் விளக்கவியல் பகுதிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
- முடிவு: கண்டறியப்பட்ட முடிவுகள் மற்றும் அவற்றின் பயன்கள்/தாக்கங்களைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறுக.
- நூல் விவரப் பட்டியல்: கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களின் விவரங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) பட்டியலிடுக.
வடிவமைப்பு வழிகாட்டுதல்கள்:
- எழுத்துரு: யுனிகோட் (தமிழுக்கு 'லதா' அல்லது 'பாமினி'; ஆங்கிலத்திற்கு 'டைம்ஸ் நியூ ரோமன்')
- எழுத்துரு அளவு: 12
- வரி இடைவெளி: 1.15
- பக்க அளவு: A4
- படங்கள்/விளக்கபடங்கள்: தேவைப்பட்டால் தொடர்புடைய படங்கள் மற்றும் விளக்கப்படங்களைச் சேர்க்கலாம்.
சமர்ப்பிப்பு முறை:
- கட்டுரைகளை poetpublication@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
- ஆசிரியரின் விவரங்கள் கட்டுரையின் முதல் பக்கத்தில் இடம்பெற வேண்டும்.
- முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கும் முன், தங்கள் வழிகாட்டியின் ஒப்புதலைப் பெற்றிருத்தல் வேண்டும்.
வெளியீட்டு நெறிமுறைகள்:
- கட்டுரை அசல் தன்மை வாய்ந்ததாகவும், பிறர் ஆக்கங்களிலிருந்து முரண்பாடின்றி எழுதப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
- ஒரே நேரத்தில் ஒரு கட்டுரையை ஒரே ஒரு இதழுக்கு மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
- வெளியீட்டிற்கு முன்னர், ஆசிரியரிடம் பதிப்புரிமை அறிவிப்புப் படிவம் பெறப்படும்.
- தலைமை பதிப்பாசிரியரின் முடிவே இறுதியானதாகக் கருதப்படும்
- கட்டுரை ஏற்பு அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்
