Perunthanmai: Multidisciplinary Tamil Studies Series
1. திறந்தநிலை அணுகல் மற்றும் உரிமக் கொள்கை (Open Access & Licensing Policy)பெருந்தன்மை தொகுப்பு ஒரு 'கோல்ட் ஓபன் அக்சஸ்' (Gold Open Access) வெளியீடாகும். உலகளாவிய தமிழ் ஆய்வு முடிவுகளை விரைவாகவும் தடையின்றியும் கொண்டு சேர்பதே எமது நோக்கம். இத்தொகுப்பில் உள்ள அனைத்து அத்தியாயங்களும் PDF வடிவில் Zenodo மற்றும் இணையதளத்தில் இலவசமாக வாசிக்கும் வகையில் பதிவேற்றப்படுகின்றன.உரிமம்: அனைத்து அத்தியாயங்களும் 'Creative Commons Attribution-NonCommercial (CC BY-NC 4.0)' என்ற சர்வதேச உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன.
பதிப்புரிமை:
அத்தியாயங்களின் முழுமையான பதிப்புரிமையை ஆசிரியர்களே தக்கவைத்துக்கொள்கின்றனர். இத்தொகுப்பில் முதன்முதலில் வெளியிடும் உரிமையை மட்டும் பதிப்பகத்திற்கு வழங்குகின்றனர்.
2. மதிப்பீட்டுக் கொள்கை (Peer Review Policy)
ஆய்வுத் தரத்தை உறுதி செய்ய 'இருமுனை மறைநிலை ஆய்வு' (Double-Blind Peer Review) முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் குறைந்தது 2 துறை சார்ந்த நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படும். அசல் தன்மை, ஆய்வு நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுப்பு ஆசிரியர் இறுதியான முடிவை எடுப்பார்.
3.ஆவணக் காப்பகம் மற்றும் DOI கொள்கை
ஒவ்வொரு அத்தியாயமும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்:
காப்பகம்: அத்தியாயங்கள் Zenodo (CERN) மற்றும் Internet Archive போன்ற சர்வதேசத் தளங்களில் நிரந்தரமாகச் சேமிக்கப்படுகின்றன.
அடையாளம்: முழு தொகுப்பிற்கு ISBN-ம், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் Zenodo மூலம் தனித்துவமான DOI எண்ணும் வழங்கப்படுகிறது. இது உங்கள் அத்தியாயத்தை உலக அளவில் எவரும் எளிதாகக் கண்டறியவும் மேற்கோள் காட்டவும் உதவும்.
4. அத்தியாய நெறிமுறைகள்: பிற படைப்புகளைத் தழுவி எழுதல் (Plagiarism) மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட அத்தியாயங்களைத் தவிர்பதில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை பின்பற்றப்படுகிறது. Plagiarism X மற்றும் Plagiarisma மென்பொருள்கள் மூலம் சரிபார்கப்படும்.
5. மொழியாக்கத் திட்டம் முதன்மை அத்தியாயங்கள் தமிழில் இருந்தாலும், மிகச்சிறந்த தரம் கொண்டவை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தமிழாய்வு முடிவுகள் சர்வதேச தெற்காசிய ஆய்வு சமூகத்தை அடையும்.
குறிப்பு: முன்னர் தமிழில் வெளியான சில அத்தியாயங்கள், இத்தொகுப்பில் ஆங்கில மொழியாக்கமாக இடம்பெற்றுள்ளன.
6. தேர்வு விகிதம் தரத்தை உறுதிப்படுத்த, சமர்பிக்கப்படும் அத்தியாயங்களில் 20% முதல் 30% வரை மட்டுமே மிகச் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
7.நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டண விபரம் அத்தியாயம் சமர்பிக்கவோ அல்லது மதிப்பீடு செய்யவோ எந்தவொரு கட்டணமும் வசூலிப்பதில்லை. தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட பிறகு மட்டும் பின்வரும் குறைந்தபட்சக் கட்டணங்கள்:
கட்டாய இணையப் பராமரிப்பு கட்டணம்: Rs.300 (INR) - DOI ஒதுக்கீடு, Zenodo காப்பகம், ISBN பதிவு ஆகியவை அடங்கும்.
விருப்ப அச்சுச் சேவை: Rs.300 (INR) - ISBN தொகுப்பு பிரதி + அதிகாரப்பூர்வ சான்றிதழ் + India முழுமைக்கும் Courier.
8. அச்சு வெளியீட்டுக் கொள்கை
பெருந்தன்மை தொகுப்பு உயர்தர காகிதத்தில், ISBN எண்ணுடன் நேர்தியான வடிவமைப்போடு தொழில்முறைத் தரத்தில் வெளியிடப்படும். Online + Print இரண்டு வடிவங்களும் உண்டு.9. வெளியீட்டு அறநெறி சுருக்கம் (PEMS)பெருந்தன்மை வெளியீடுகள் COPE வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றன.
நடுநிலைமை: ஆசிரியர், மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இல்லை.
முறைகேடு: திருட்டு அல்லது ஒரே அத்தியாயத்தை பல இடங்களில் சமர்பித்தல் கண்டறியப்பட்டால் உடனடி நிராகரிப்பு மற்றும் Retraction நடவடிக்கை எடுக்கப்படும்.
AI கொள்கை: மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இலக்கணச் சரிபார்பிற்கு மட்டும் AI பயன்படுத்தலாம்.
தொடர்புக்கு:
மின்னஞ்சல்: alagar@perunthanmai.co.in
இணையதளம்: www.perunthanmai.co.in
சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள்:
தொடர்புகளுக்கு:
ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க
அல்லது வினவல்களுக்கு, எங்கள் இணையதளம் www.perunthanmai.co.in ஐப் பார்வையிடவும் அல்லது தலைமை ஆசிரியருக்கு sivakumar@perunthanmai.co.in இல் மின்னஞ்சல் அனுப்பவும்.